பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றுவதற்கான இலகுவான வழி

ஒரு ஐபோனில் இருந்து மற்றொரு ஐபோனுக்கு மாறும்போது, உங்கள் டேட்டா அனைத்தையும் மாற்றுவது அவசியம். பழைய ஐபோனில் சேமிக்கப்பட்ட அல்லது ஐகிளவுடில் காப்பி செய்யப்பட்ட அனைத்து செட்டிங்ஸ், பயன்பாடுகள் மற்றும் பிற பைல்ஸ்களை அவசியம் மாற்ற வேண்டும். இந்த மாற்றத்தைச் செய்ய, எந்த 3-ம் தர மென்பொருள் அல்லது ஆப்ஸ்களைப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் பழைய ஐபோனில் இருந்து உங்கள் புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்ற 3 எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. குயிக் ஸ்டார்ட் (Quick Start):
இந்த முறைக்கு பழைய மற்றும் புதிய ஐபோன் இரண்டும் தேவை. 2 ஐபோன்களிலும் போதுமான பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
முதலில் 2 ஐபோன்களையும் ஒன்றுக்கொன்று அருகில் கொண்டுவந்து, பழைய ஐபோனின் ப்ளூடூத் (Bluetooth) ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
புதிய ஐபோனை ஆன் செய்யும்போது, உங்கள் பழைய ஐபோனின் திரையில் ப்ராம்ப்ட் (prompt) தோன்றும். அதில் Continue என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
‘Continue’ என்பதை அழுத்திய பிறகு, உங்கள் புதிய ஐபோனின் திரையில் அனிமேஷன் (animation) தோன்றும். இந்த அனிமேஷனை பழைய ஐபோனின் கேமராவால் ஸ்கேன் (scan) செய்யவும். 2 சாதனங்களும் இணைக்கப்படும்.
புதிய ஐபோன் இப்போது உங்கள் passcode கேட்கும். உங்கள் ஆப்பிள் ஐடி (Apple ID) மற்றும் கடவுக்குறியீடு இரண்டையும் உள்ளிடவும். இந்த கட்டத்தில், உங்கள் தொலைபேசியில் அடையாளங்காணலை எளிதாக்க ஃபேஸ் ஐடி (Face ID) ஐயும் அமைக்கலாம்.
உங்கள் ஆப்பிள் ஐடி மற்றும் கடவுக்குறியீட்டை உள்ளிட்ட பிறகு, ‘ஐபோனில் இருந்து மாற்றவும்’ (Transfer From iPhone) என்பதைத் தேர்ந்தெடுத்து, டிரான்ஸ்பர் முடியும் வரை காத்திருக்கவும்.
இந்த கட்டத்தில், ஐகிளவுடில் (iCloud) இருந்து டேட்டாவைப் பதிவிறக்க மற்றொரு விருப்பத்தைப் பயன்படுத்தவும் நீங்கள் முடிவு செய்யலாம்.
2. ஐகிளவுட் (iCloud):
உங்கள் டேட்டாவை ஐகிளவுட் மூலம் மாற்ற, முதலில் உங்கள் பழைய ஐபோனின் backup ஐகிளவுடில் உறுதிப்படுத்த வேண்டும்.
உங்கள் பழைய ஐபோனை ஐகிளவுடில் backup எடுத்த பிறகு, உங்கள் புதிய ஐபோனை ஆன் செய்யவும்.
புதிய ஐபோனை வைஃபை (WiFi) உடன் இணைத்து, setup தொடரவும்.
‘ஆப்ஸ் & டேட்டா’ (Apps & Data) காட்சியில் ‘Restore from iCloud Backup என்பதைத் தேர்ந்தெடுத்து, ஐகிளவுடில் உள்நுழையவும்.
நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் backup தேர்ந்தெடுத்து, backup பதிவிறக்கம் முடிவடையும் வரை காத்திருக்கவும்.
3. ஐடியூன்ஸ் (iTunes):
கடைசியாக, ஐடியூன்ஸ் மற்றும் உங்கள் கணினியைப் பயன்படுத்தி பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றலாம்.
நீங்கள் எப்போதும் ஐடியூன்ஸின் லேட்டஸ்ட் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
மேலே குறிப்பிடப்பட்ட 2-வது முறையைப் போலவே, டேட்டாவை மாற்றுவதற்கு ஐடியூன்ஸைப் பயன்படுத்த உங்கள் பழைய ஐபோனின் புதுப்பிக்கப்பட்ட backup உங்களுக்குத் தேவை.
உங்கள் ஐபோன் ஏற்கனவே setup செய்யப்பட்டிருந்தால், இந்த முறையைச் செயல்படுத்துவதற்கு முன் அதை reset வேண்டியிருக்கலாம்.
உங்கள் பழைய ஐபோனை ஐடியூன்ஸில் backupஎடுத்த பிறகு, உங்கள் புதிய ஐபோனை ஆன் செய்து, செட்டப் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
“ஆப்ஸ் & டேட்டா” (Apps & Data) காட்சியில் Restore from Mac or PC என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஐபோனை USB மூலம் உங்கள் மேக் (Mac) அல்லது பிசி (PC) உடன் இணைக்கவும்.
உங்கள் கணினியில், ஐடியூன்ஸைத் திறந்து, திரையின் மேல்-இடது மூலையில் உங்கள் புதிய சாதனத்தைக் கண்டறியவும்.
Restore Backup என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் backup தேர்ந்தெடுக்கவும்.
backup பதிவிறக்கம் முடிவடையும் வரை காத்திருக்கவும்.
குயிக் ஸ்டார்ட் (Quick Start), ஐகிளவுட் (iCloud) அல்லது ஐடியூன்ஸ் (iTunes) ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றலாம். இந்த முறைகள் பாதுகாப்பானவை, எந்த 3-ம் தர பயன்பாடுகளும் தேவையில்லை.