பிரான்சுக்கான தூதராக சார்லஸ் குஷ்னரை உறுதி செய்த அமெரிக்க செனட்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகனின் தந்தையும், 2020 இல் ஜனாதிபதி மன்னிப்பு பெற்றவருமான சார்லஸ் குஷ்னரை பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவிற்கான அமெரிக்க தூதராக செனட் உறுதி செய்துள்ளது.
இந்த நியமனம் 45க்கு 51 வாக்குகள் என்ற விகிதத்தில் நிறைவேற்றப்பட்டது.
குஷ்னரின் சொந்த மாநிலமான நியூ ஜெர்சியைச் சேர்ந்த செனட்டரான கோரி புக்கர் மட்டுமே வேட்புமனுவை ஆதரித்த ஒரே ஜனநாயகக் கட்சிக்காரர்.
அதே நேரத்தில் அலாஸ்காவைச் சேர்ந்த செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி மட்டுமே எதிர்த்த ஒரே குடியரசுக் கட்சிக்காரர்.
(Visited 2 times, 1 visits today)