இலங்கை – நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை : கடும் பனிமூட்டத்தால் மூடப்பட்ட பாதைகள்!

நுவரெலியாவிற்குள் செல்லும் பல பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பனடுகிறது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பம்பரக்கலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுகிறது.
அவ்வப்போது நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக, இந்தச் சாலைகளில் வாகனம் ஓட்டும்போது வாகன முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டுமாறு நுவரெலியா காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
சமீபகாலமாக மலையகம் ஊடான போக்குவரத்து பாதையில் பல விபத்துகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் இந்த சீரற்ற வானிலையில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.