ஐரோப்பா

F-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கினால் பெரிய அபாயங்கள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பெரிய அபாயங்கள் ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கினால், “பெரிய ஆபத்துக்களை” எதிர்கொள்ளும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோவை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

F-16 போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கான கூட்டு நேச நாட்டுப் பயிற்சித் திட்டங்களை வாஷிங்டன் ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று G7 தலைவர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யா துணை வெளியுறவு அமைச்சர்,  மேற்கத்திய நாடுகள் இன்னும் விரிவாக்க சூழ்நிலையை கடைபிடிப்பதை நாங்கள் காண்கிறோம். இது தங்களுக்கு மிகப்பெரிய அபாயங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

“எதுவாக இருந்தாலும், இது எங்கள் எல்லா திட்டங்களிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், மேலும் நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய தேவையான அனைத்து வழிகளும் எங்களிடம் உள்ளன என்றும் அவர் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!