நியூஸிலாந்தில் கழுத்தின் வழியாக முட்டையிடும் அரிய வகை நத்தை கண்டுபிடிப்பு

நியூஸிலாந்தில் அரிய வகை நத்தை ஒன்று கழுத்தின் வழியாக முட்டையிட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த நத்தை நியூஸிலந்தில் மட்டும் காணப்படும் Powelliphanta augusta ரகத்தை சேர்ந்ததென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ரக நத்தைகளின் இருப்பிடமாக இருந்த தென் தீவின் மலைப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டதாக அமைப்பு கூறியது.
20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுமார் 2,000 நத்தைகள் குளிர்நிலையில் உள்ள பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
எதிர்பாராத விதமாக 2011இல் பெட்டிகளின் குளிர்சாதனத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகச் சுமார் 800 நத்தைகள் உயிரிழந்துள்ளன.
அமைப்பின் தொடர் முயற்சிகளால் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 1,900 நத்தைகளும் 2,200 முட்டைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.