இங்கிலாந்தில் வங்கிக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயது நபர் கத்தியால் குத்திக் கொலை

கிழக்கு இங்கிலாந்தின் டெர்பி நகரில் உள்ள ஒரு வங்கிக் கிளைக்குள் குத்திக் கொல்லப்பட்ட 37 வயது நபர் குர்விந்தர் ஜோஹல் என முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
47 வயதான சோமாலி வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
டெர்பியில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தெருவில் உள்ள லாயிட்ஸ் வங்கிக் கிளையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக டெர்பிஷயர் கான்ஸ்டாபுலரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
ஜோஹல் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் (சிபிஎஸ்) உடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, ஹேபே கப்திரக்ஸ்மான் நூர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
“டெர்பிஷயர் கான்ஸ்டாபுலரி வழங்கிய ஆதாரங்களை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, 37 வயதான குர்விந்தர் ஜோஹலின் மரணம் தொடர்பாக நாங்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளோம்” என்று கிழக்கு மிட்லாண்ட்ஸில் உள்ள துணைத் தலைமை கிரவுன் வழக்கறிஞர் சமனாதா ஷாலோ தெரிவித்தார்.