அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன பெண் உயிருடன் வந்த அதிசயம்

அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பெண் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1962ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி ரீட்ஸ்பர்க் நகரிலிருந்து 20 வயதாக இருந்த போது ஆட்ரே பேக்கர்பேர்க் காணாமல்போனார். தற்போது அவருக்கு வயது 82 ஆகும்.
விருப்பப்பட்டுக் காணாமல் போனபோது பேக்கர்பேர்க்குக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.
காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன் தமக்குக் கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு எதிராகப் பேக்கர்பேர்க் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல்போன நாளில் வேலையிடத்திலிருந்து சம்பளத்தைப் பெற்ற அவர், சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இண்டியானாபொலிஸ் நகருக்குச் சென்றார்.
அவருடன் அவரது குழந்தைப் பராமரிப்பாளரும் சென்றுள்ளார். பாதி வழியில் அவரது குழந்தைப் பராமரிப்பாளர் வீடு திரும்பினார். ஆனால் பேக்கர்பேர்க் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.