தேர்தலுக்கு தயாராகும் 30 லட்சம் சிங்கப்பூர் மக்கள்

சிங்கப்பூரில் நாளை மறுநாள் 3ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுமார் 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வருகிறது.
(Visited 1 times, 1 visits today)