இலங்கை – கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணிப்போருக்கு அவசர தகவல்!

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
எனவே, கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகிவிடும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே யார்டில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மஹாவ வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ரயில் தடம் புரண்டதால் இரண்டு ரயில் பாதைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)