காஷ்மீர் விவகாரம் : இலங்கையின் உதவியை நாடும் பாகிஸ்தான்!

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை அதிகரித்து வருகின்ற நிலையில், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) இடைநிறுத்தப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை நடுநிலையான, அணிசேரா பங்கை வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது,
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய பிறகு பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட அறிக்கையின் வார்த்தைகளை பாகிஸ்தான் அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.
மார்ச் 11, 2025 அன்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்கு அருகில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை பலுச் பிரிவினைவாதிகள் கடத்திய சம்பவத்தைக் கண்டித்து, இந்த வழக்கில் இலங்கை ஜனாதிபதி நடுநிலைமையைக் காட்டாதது ஏன் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை மன்னிக்கவில்லை என்று வலியுறுத்தி, பஹல்காமில் என்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.