அசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 9a ஸ்மார்ட் போன்

கூகுள் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான பிக்சல் 9a வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சில சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, பிக்சல் 9a இப்போது இந்தியாவில் விற்பனையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது டென்சர் சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
மேலும், இதில் டூயல் கேமரா செட்அப்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையுடன் ஒரு அறிமுகச் சலுகையும் உள்ளது. எனவே, இந்த பிரீமியம் லெவல் ஸ்மார்ட்போனை அசல் விலையை விட மிகக் குறைந்த விலையில் நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் 8GB + 256GB வகையை கொண்ட பிக்சல் 9a ஸ்மார்ட்போன் ஆனது ரூ.49,999 விலையில் கிடைக்கிறது. இது ஐரிஸ், அப்சிடியன் மற்றும் பீங்கான் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைனில் பிளிப்கார்ட் மூலமாகவோ அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல், டாடா குரோமா, விஜய் சேல்ஸ் போன்ற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தோ வாங்கலாம்.
அறிமுக சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் பிக்சல் 9a ஸ்மார்ட்போன் ஆனது ரூ.3,000 கேஷ்பேக்குடன் கிடைக்கிறது. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத கூகுள் ஒன் சப்ஸ்கிரிப்ஷன், மூன்று மாத யூடியூப் பிரீமியம் மற்றும் ஆறு மாத ஃபிட்பிட் பிரீமியம் ஆகியவை கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 9a ஸ்மார்ட்போன் ஆனது டென்சர் G4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2,700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz அடாப்டிவ் ரெப்பிரேஷ் ரேட் உடன் 6.3 இன்ச் ஆக்டுவா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பிக்சல் 9a ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்குகிறது, மேலும் இதில் 7 OS அப்டேட்களுடன் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சமாக, பிக்சல் 9a ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்டுள்ளது. வீடியோ மற்றும் செல்ஃபிக்களுக்கு 13MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 9a ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 5,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது 23W வயர்டு சார்ஜிங் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும், இந்த போன் ஆனது 5G இணைப்பு, புளூடூத் 5.3, Wi-Fi 6e மற்றும் NFC ஆகியவற்றை கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்கள், சார்ஜிங் மற்றும் USB டைப்-C 3.2 ஆகியவை அடங்கும்.