WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

ஸ்டோரேஜ் குறைபாடு என்பது இன்றைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு எரிச்சலூட்டும் பிரச்சனை ஆகும். பொதுவாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது போனில் பல்வேறு வித செயலிகளை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு செயலியும் அது இயங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ் அல்லது மெமரியை எடுத்துக் கொள்ளும். மேலும் அதில் தரவிறக்கப்படும் மீடியா ஃபைல்களுக்காக தனியாக மெமரியை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக சிறிது சிறிதாக உங்களது போன் ஸ்டோரேஜ் குறைந்து கொண்டே வரும்.
இன்றைய நிலையில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்கள் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. ஏனெனில், மற்ற செயலிகளை விட வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது நம்முடைய போன் ஸ்டோரேஜ் அதிக அளவு மெமரியை எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. வாட்ஸ்அப்பில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்கள் என ஒவ்வொன்றும் அதன் அளவிற்கு ஏற்ப நமது போனில் மெமரியை எடுத்துக் கொள்ளும்.
உங்கள் போனில் ஸ்டோரேஜ் இல்லை எனும் பட்சத்தில் உங்களால் மெசேஜை அனுப்பவோ அல்லது மற்றவர்கள் அனுப்பும் மெசேஜை பெறவோ முடியாது. ஆனால், இதை சரி செய்வதற்கும் நமக்கு ஒரு வழி உள்ளது. வாட்ஸ்அப் தனது பிளாட்பார்மிலேயே இதற்கு என தனியாக ஒரு செட்டிங்கை வைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தேவையற்ற புகைப்படம் டவுன்லோட் செய்யப்படுவதை நம்மால் தவிர்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட சாட்டிற்கோ அல்லது குழுவில் அனுப்பப்படும் மீடியா ஃபைல்களுக்கு மட்டும் கூட நீங்கள் இந்த செட்டிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வாட்ஸ்அப்பில் ஆட்டோ டவுன்லோட் வசதியை ஆஃப் செய்வது எப்படி என பார்ப்போம்.
வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும்.
வலது மேல் பக்கம் உள்ள 3 புள்ளிகள் கொண்ட மெனு பட்டனை க்ளிக் செய்யவும். பிறகு தோன்றும் டிராப் டவுன் மெனுவில் இருந்து “செட்டிங்க்ஸ்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
“சாட்ஸ்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
நீங்கள் ஐபோன் யூசர்-ஆக இருந்தால் “சேவ் போட்டோஸ்” என்ற ஆப்ஷனை ஆஃப் செய்யவும் அல்லது ஆண்ட்ராய்டு யூசராக இருந்தால் மீடியா விசிபிலிட்டியை ஆஃப் செய்யவும்.
இந்த மீடியா விசிபிலிட்டியை ஆஃப் செய்ததும் உங்களது வாட்ஸ்அப்பில் டவுன்லோட் செய்யப்படும் போட்டோ, வீடியோ, மற்றும் இதர டாக்குமெண்டுகள் எதுவும் உங்களது கேலரியில் சென்று சேராது. நீங்கள் விரும்பினால் மட்டுமே அவற்றை உங்களது கேலரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஆப்ஷனை ஒரு குழுவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கான சாட்டிற்கும் மட்டும் கூட நீங்கள் வைத்துக் கொள்ள முடியும்.
இந்த ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை சுவிட்ச் ஆஃப் செய்த பிறகு ஒவ்வொரு முறையும் நீங்கள் விரும்பிய ஃபைலை நீங்களே தேர்வு செய்தால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.