நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொலைகளின் பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் அருண விதானகமகே எனப்படும் கஜ்ஜா மற்றும் அவரது 2 பிள்ளைகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்தியாவிற்கு தப்பிச் செல்லும்போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
நாடுகடத்தப்பட்ட சந்தேக நபர் இலங்கை வந்தவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
(Visited 4 times, 4 visits today)