ஐரோப்பா செய்தி

வேலை நேரத்தில் ஜேர்மன் சுவிஸ் மொழியை பேசக்கூடாது-சுவிஸ் விமான நிறுவனம்

பணி செய்யும் நேரத்தில் விமான பணியில் ஈடுபாடுள்ள ஊழியர்கள் சுவிஸ் ஜேர்மன் மொழியை பேசக்கூடாது என்று ஹெல்வெட்டிக் ஏர்வேய்ஸ் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கு காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்ததாவது, சுவிஸ் ஜேர்மன் பேச முடியாத மற்றைய ஊழியர்களுக்கு மதிப்பு வழங்கும் முகமாக சுவிஸ் ஜேர்மன் மொழியை மட்டும் பேசுவதை வேலை செய்யும் நேரத்தில் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

இருப்பினும் சுவிஸ் ஜேர்மன் மொழியை பேசும் சுவிஸ் நாட்டு ஊழியர்கள் இந்த அறிவிப்பால் எரிச்சல் அடைந்துள்ளதாக சுவிஸ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில ஊழியர்கள் தெரிவிக்கையில் விமான நிறுவனத்தின் வேண்டுகோளை சிலர்தான் பின்பற்றுவார்கள் என்றும் மற்றும் சிலர் இது சுவிஸ் விமான நிறுவனம் நாங்கள் அந்த நாட்டு மக்கள் எங்களை எவ்வாறு அந்த மொழியை பணியின் பொழுது பேசக்கூடாது என்று கூறலாம் என்றும் வாதாடுகிறார்கள்.

 

(Visited 11 times, 1 visits today)

hqxd1

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி