துருக்கியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் – கட்டடங்களிலிருந்து கீழே குதித்த 150 பேர் காயம்

துருக்கி – இஸ்தான்புல் நகரை நிலநடுக்கம் உலுக்கியபோது கட்டடங்களிலிருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் பதற்றத்தில் அவ்வாறு செய்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனினும் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அந்நகரில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாக எந்த உடனடித் தகவலும் இல்லை.
இஸ்தான்புல் பக்கத்தில் உள்ள சில மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் 13 விநாடிகள் நீடித்ததாகவும் 50க்கும் அதிகமான பின்னதிர்வுகள் நேர்ந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார்.
(Visited 2 times, 2 visits today)