சில வாகன வரிகளுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை

மோட்டார் வாகனத்துறையைக் குறிவைத்து குறிப்பிட்ட வரிகளைக் குறைப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. வரிவிதிப்பால் லாபத்துக்கும் வேலைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என கார் தயாரிப்பு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கெனவே வரிவிதிப்புக்கு உள்ளான மோட்டார் வாகனங்களையும் உதிரிப் பாகங்களையும் எஃகு, அலுமினிய இறக்குமதிகள் மீதான தீர்வையால் கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாக்குவதைவிட்டு ஒரு நடைமுறை விலக்களிக்கும் என இந்த விவகாரம் குறித்து தகவலறிந்தோர் கூறினர். இதனால் வரிகள் அடுக்கிக்கொண்டு போவதைத் தவிர்க்க முடியும். ஆராயப்படும் மற்றொரு நடவடிக்கை, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக உடன்பாட்டுக்கு உட்படும் வாகன உதிரிப் பாகங்களுக்கு வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்களிக்கும்.
வாகன உதிரிப் பாகங்கள் மீதான வரிகளைக் குறைப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் முன்னதாக தெரிவித்திருந்தது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் வாகன உதிரிப் பாகங்களுக்கும் நிர்வாகம் விலக்களிக்கலாம் என்றும் அந்த ஊடகம் கூறியிருந்தது.
வாகன விலை உயர்வு, உற்பத்திக் குறைப்பு, வேலை இழப்பு குறித்து வாகனத் தயாரிப்பாளர்கள் எச்சரித்துவரும் வேளையில், இந்த மாற்றங்கள் கடைப்பிடிக்கப்படால் அவர்களுக்கு நிம்மதி தரும்