வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மூவர் கட்டுநாயக்க விமானத்தில் கைது

குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த 3 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவால் அவர்கள் செய்யப்பட்டனர்.
இலங்கைப் பிரஜைகளான மூன்று சந்தேக நபர்களும், தங்கள் பொதிகளில் போதைப்பொருட்களை கவனமாக மறைத்து பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு கொண்டு வந்திருந்தனர்.
அவர்களின் பொதிகளில் 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 45 மில்லியன் ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
மூன்று சந்தேக நபர்களில் இருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றைய சந்தேக நபர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.