சீனாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 20 பேர் மரணம்

சீனாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு சீனாவின் லாங்குவா கவுண்டியில் உள்ள வீடுகளில் இரவு முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு, பல குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் பராமரிப்பு இல்லத்தில் அவசர சேவைகள் இப்போது குவிந்துள்ளன.
மற்ற குடியிருப்பாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படும் நிலையில், மீதமுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இறந்தவர்களின் அடையாளங்கள் உட்பட வேறு எந்த விவரங்களும் லாங்குவா கவுண்டி அதிகாரிகளால் தற்போது வெளியிடப்படவில்லை.
சீனாவின் அரசு நடத்தும் பத்திரிகை நிறுவனமான சின்ஹுவா நியூஸ் ஏஜெசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெபெய் மாகாணத்தின் செங்டே நகரத்தின் லாங்குவா கவுண்டியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது… முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, 9 ஆம் திகதி அதிகாலை 3:00 மணி நிலவரப்படி, தீ விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.
“தற்போது, முதியோர் இல்லத்தில் உள்ள மற்ற முதியவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹெபெய் மாகாணம் மற்றும் செங்டே நகரத்தின் இரண்டு நிலைகளில் உள்ள நிபுணர் குழுக்கள் மீட்பு மற்றும் அதன் பின்விளைவு பணிகளை வழிநடத்த விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளன, மேலும் தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.”