இஸ்தான்புல் மேயர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கைதுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஊழல் வழக்கு தொடர்பில் இமாமோக்லுவின் நெருங்கிய உதவியாளா் உட்பட மேலும் 100 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான ‘அனடோலு’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி எர்துகானை மிகக் கடுமையாக எதிர்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளமையானது எதிர்க்கட்சியினரை அரசு ஒடுக்குகிறது என்ற விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)