இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் – மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை
ஜூலை 2024 முதல் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கப்பலில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்தியர்கள் மரண தண்டனையை எதிர்கொள்கிறார்கள் என்று ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வரும் 38 வயது ராஜு முத்துக்குமரன், 34 வயது செல்வதுரை தினகரன் மற்றும் 45 வயது கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகியோர் லெஜண்ட் அக்வாரிஸ் சரக்குக் கப்பலில் 106 கிலோ கிரிஸ்டல் மெத்தை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஒரு ரகசிய தகவலின் பேரில், இந்தோனேசிய அதிகாரிகள், சிங்கப்பூரிலிருந்து படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் தொலைவில் உள்ள கரிமுன் மாவட்டத்தின் போங்கர் நீரில் அந்தக் கப்பலை மடக்கிப் பிடித்தனர்.





