WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அப்டேட் – ஒரே இடத்தில் இன்ஸ்டா, பேஸ்புக் இயக்கலாம்

பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப், தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், வாட்ஸ்அப் profile-லிலேயே பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் லிங்க்-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, ஸ்டிக்கர்களை க்ரியேட் மற்றும் எடிட் செய்யக்கூடிய அப்டேட், வாய்ஸ்நோட் அப்டேட், தனித்தனி டேப்கள் முதலிய பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட் செய்துவருகிறது.
அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய மூன்று சமூக வலைதளங்களையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி இயக்கும் புது அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
வாட்ஸ் அப்பில் பயனர்கள் setting செல்ல வேண்டும். அதில் ஓபன் இன்ஸ்டா, பேஸ்புக், திரட்ஸ் என்று ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்-ல் profile சென்று லிங்க் ஆப்ஷனை கிளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.
இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் எடிட் செய்து கொள்ள முடியும். இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.