அமெரிக்காவில் விமானத்தில் நபரால் ஏற்பட்ட பரபரப்பு – கட்டி வைத்த ஊழியர்கள்

டெல்ட்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தில் இருந்தோரைத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
அந்த விமானம் திங்கட்கிழமை அமெரிக்காவின் அட்லான்ட்டா நகரிலிருந்து லொஸ் ஏஞ்சலிஸ் நகருக்குப் புறப்பட்டது.
விமானம் லொஸ் ஏஞ்சலிஸில் தரையிறங்கியவுடன் விமான ஊழியர்கள் நபரை கட்டிப்போட்டனர்.
அவர் பயணி ஒருவரைக் கடித்ததாகவும் சிலரை அடித்ததாகவும் லொஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புப் பிரிவும் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையமும் தெரிவித்தன.
சம்பவ இடத்திற்கு வந்த அவசர மருத்துவ உதவி வாகனம் தடுத்துவைக்கப்பட்ட நபரை மனோவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றது.
அவர் காயம் விளைவித்த நபருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பயணிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் குற்றவியல் குற்றச்சாட்டுகள் அல்லது உரிமையியல் வழக்கை எதிர்நோக்க நேரிடலாம்.
(Visited 5 times, 5 visits today)