கொக்குவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் தீடிரென உயிரிழப்பு

யா / கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களின் பெற்றோகளுக்கான கூட்டம் இடம் பெற்றுக்கொண்டிருந்த சமயம் தீடிரென மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் பிரியதர்சினி வயது 52 என்ற இளம் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
(Visited 17 times, 1 visits today)