மதுபானங்கள் மீதான வரியை 200 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப் : சரிந்த பங்குகள்!

உலகின் முக்கிய பொருளாதார சக்திகள் இப்போது இறக்குமதி வரிகள் தொடர்பாக நேரடிப் போரில் ஈடுபட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க உறுதியளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் எங்களிடம் என்ன வசூலித்தாலும், நாங்கள் அவர்களிடம் வசூலிக்கிறோம். அதைப் பற்றி யாரும் புகார் செய்ய முடியாது.” எனக் கூறியுள்ளார்.
இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் ஷாம்பெயின் மற்றும் ஒயின் மீதான வரியை அதிகரித்துள்ளது. அமெரிக்க விஸ்கி மீது 50% வரி விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதலளிக்கும் விதமான ட்ரம்ப் 200 சதவீத வரியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நிதிச் சந்தைகளை உலுக்கிய ஒரு வர்த்தகப் போரில் இது மேலும் அதிகரிப்பு ஆகும், மேலும் இந்தச் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக மதுபான நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.