மகளின் டிக்டாக் காணொளியால் அமைச்சர் பதவியை இழந்த தந்தை
மகளின் டிக்டாக் காணொளியால் அமைச்சர் பதவியை இழந்த தந்தை ஒருவரைப் பற்றிய தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பப்புவா நியூகினியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் தட்சென்கோ தனது அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் இராஜினாமா செய்ததே இதற்குக் காரணம் ஆகும்.
அண்மையில் நடைபெற்ற சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கச் செய்த செலவு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
9 இலட்சம் டொலர் அரச பணத்தை செலவழித்து முடிசூட்டு விழாவிற்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் உட்பட இருபது பேர் கொண்ட தூதுக்குழுவில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அமைச்சரின் மகள் சவானாவும் கலந்து கொண்டுள்ளார்.
அமைச்சரின் மகள் வெளியிட்ட டிக்டாக் காணொளியை பார்த்து பப்புவா நியூ கினியா மக்கள் மேலும் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஜஸ்டின் கச்சென்கோவுடன் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட அவரது மகள் சவன்னா, விஜயத்தின் போது சில சுவாரஸ்யமான டிக்டாக் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.
40 வீதம் பேர் வறுமையில் வாடும் பப்புவா நியூ கினியாவில் வசிப்பவர்களை கோபத்தில் ஆழ்த்திய காணொளிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த காணொளிகளில், சவன்னா அவுஸ்திரேலியாவில் இருந்து லண்டன் செல்லும் வழியில் தனது தந்தையின் சலுகையின் கீழ் சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தனது மகளை லண்டனுக்கு அழைத்துச் சென்றதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.