சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!
சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணியில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களை அடுத்து, ஜனாதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நாட்டின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தனியான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும், துஷ்பிரயோகங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்டவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.