இலங்கையில் மின்சார நுகர்வோருக்கு கிடைக்கவுள்ள வட்டி

மின்சார இணைப்புகளைப் பெறும்போது நாட்டில் உள்ள மின்சார நுகர்வோரிடம் வசூலிக்கப்படும் வைப்புத் தொகைக்கு வருடாந்திர வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் துரைராஜா, சோபித ராஜகருணா மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு அறிவித்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த இலங்கை மின்சார சபை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 11.67 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை மின்சார நுகர்வோருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.