ஆசியா செய்தி

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது?

கேரள மாநிலம் கொச்சியில் இந்தியக் கடற்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள பொருள் சிக்கியது.

இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் இதுவே ஆக அதிக மதிப்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு அந்தப் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

போதைப் பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பலில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி