உக்ரைன் தான் ரஷ்யா படையெடுப்பிற்கு காரணமா? : ட்ரம்பின் கருத்தால் சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “அநேகமாக” சந்திப்பேன் என்று கூறியுள்ள நிலையில், மாஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தான் காரணம் என்று குற்றம் சாட்டி ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கடுத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் கியேவுக்கு இடம் மறுக்கப்பட்டதாக எழுந்த புகார்களை நிராகரித்தார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர எனக்கு அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன், அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)