இலங்கை எல்ல வனப்பகுதியில் தீ பரவல்: “போலி செய்தி”க்கு சுற்றுலா பிரதி அமைச்சர் பதில்

எல்ல வனப்பகுதியில் பரவி வரும் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்த பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.
எனவே, அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தீயை அணைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் கூறினார்.
எல்ல வனப்பகுதியில் தீயை அணைக்கும் நடவடிக்கை தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு சுற்றுலா பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.