இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை – வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் (live)

நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார்.

எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் நாம் வெற்றிப் பெற்றுள்ளோம்.

கடனை மீள செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை காலவகாசம் உள்ளது.இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கடன் செலுத்தும் தரப்படுத்தலை அதிரிக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது…

“2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

நெருக்கடியைக் குறைப்பதற்கான சில நடவடிக்கைகள், குறிப்பாக செலவின் அடிப்படையில் எரிசக்தி விலைகளை சரிசெய்தல், வரிகளும் வட்டி வீதங்களும் அதிகரிப்பது குடிமக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பங்கை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைக்க பொருளாதார இறையாண்மை அவசியம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​பொதுக் கடனை மறுசீரமைப்பதில் ஈடுபட்டிருந்தோம், அதை மாற்றுவது நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்பதால் அதை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை….”

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வௌியேறி முன்னுரிமை இனங்காணப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த வரவு செலவு திட்டம் இதுவாகும்.

தேசிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வரவு செலவு திட்டமே இது. கைத்தொழிற்துறை , சேவை, விவசாயம் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக பொது மக்களின் உதவிகள் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் சேவையை சாதாரண விலைக்கும் தரமாகவும் தொடர்ந்து வழங்க முறைமையொன்று.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“வரையறுக்கப்பட்ட வரி நிதிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.”

“பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை. பொருளாதாரத்தின் அனைத்து நன்மைகளும் பொருளாதார செயல்முறைக்கு பங்களிக்கப்படுகின்றன.”

“உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வரவு செலவு திட்டம்.”

“நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம்.”

“ஊழல் மற்றும் விரயத்தை குறைத்து, கூட்டு ஒழுக்கத்தின் மூலம் ஒரு புதிய பயணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் முறைமை ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.”

“மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதே இந்த வரவு செலவு திட்டத்தின் தத்துவம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்