செய்தி விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர்.

பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார்.

அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 29 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி