ஆளுநர்கள் பதவி விலகாவிடின், பதவி நீக்கப்படுவார்கள் என அறிவி்ப்பு!
ஜனாதிபதி அலுவலகத்தினால் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட நான்கு ஆளுநர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யாவிடின், அவர்களை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்துக்கு முன்பாக ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதே போன்று குறித்த நான்கு ஆளுநர்களின் இடத்துக்கு புதிய ஆளுநர்களாக நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமான், தயா கமகே மற்றும் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.