கோவில் உண்டியலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதை கோயில் காவலாளி ஒருவர் பார்த்தார்.நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து.
பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.