அமெரிக்காவில் 100,000 முட்டைகள் திருட்டு – தொடரும் மர்மம் – குழப்பத்தில் பொலிஸார்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/800166cf-af13-49ce-af04-78c74e003322.jpg)
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 100,000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலையின் காரணமாக அந்தத் திருட்டு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்தோர் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பறவைக் காய்ச்சலின் காரணமாகப் பல பண்ணை உரிமையாளர்கள் மில்லியன் கணக்கான கோழிகளைக் கொல்ல நேர்ந்தது.
அதன் விளைவாக 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் முட்டை விலை இரட்டிபாகியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பன்னிரண்டு முட்டைகளின் சராசரி விலை 4.15 டொலராக இருந்தது.
இவ்வாண்டு முட்டை விலை மேலும் 20 சதவீதம் உயரலாம் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வேளான்மை அமைச்சு தெரிவித்தது.
(Visited 2 times, 1 visits today)