ஜப்பானை உலுக்கி வரும் பனிப்பொழிவு – விமானங்கள் இரத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/557ec336-aea6-44ec-b5c0-bd3367f676b2.jpg)
ஜப்பானை உலுக்கி வரும் பனிப்பொழிவும் காற்றும் இன்னும் கடுமையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.
ஜப்பான் கடலில் வீசிய குளிர்காற்றால் பனிப்புயல் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனவும் அவதானமாக செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாள் முழுதும் பனி மேகங்கள் உருவாகும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று நடுங்கவைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அதனால் பனிப்பொழிவு இன்னும் அதிகரித்து வழக்கமாகப் பனி பெய்யாத இடங்களிலும் அதிகளவில் பெய்யப்போவதாக வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு நகரில் 6 மணி நேரத்துக்குள் 29 செண்டிமீட்டர் அடர்த்திக்குப் பனி கொட்டித் தீர்த்ததாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது.
இன்னும் பல இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிப்பொழிவு 100 செண்டிமீட்டர் அளவுக்குப் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகளின் சில பகுதிகள் மூடப்பட்டதால் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டது.
பல விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது. பனிச்சரிவு, மின்தடை ஆகியவை ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.