DeepSeek செயலியால் அச்சம் – அடுத்தடுத்து தடை செய்யும் நாடுகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/2d0ea3d4-0ad4-441d-8c50-5d2c0b74142e.jpg)
உலகின் பல நாடுகளின் அரச துறையில் DeepSeek செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் கொரியாவின் பொலிஸார் சில அமைச்சுகளும் வேலையிடக் கணினிகளில் DeepSeek செயலியைத் தற்காலிகமாகத் தடைசெய்துள்ளன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்ததாகத் தென் கொரியா கூறியது.
சீன நிறுவனமான Deepseek பயனீட்டாளர்களின் தகவலை எப்படி நிர்வகிக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும்படிக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
செயலியின் பாதுகாப்பு, தரவு செயல்முறைகள் குறித்து இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா நேற்று அனைத்து அரசாங்கக் கருவிகளிலும் DeepSeek செயலியைத் தடைசெய்தது.
பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைப்படி அந்த நடவடிக்கையை எடுத்ததாய் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
செயலியில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படாமல் போகலாம் என்று அக்கறை கொள்வதாக அது கூறியது.