ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு : போக்குவரத்து பாதிப்பு!
ஜப்பானின் வடக்கு பிரதான தீவான ஹொக்கைடோவில் செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத பனிப்பொழிவு பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தீவின் கிழக்குப் பகுதிகளில், ஒபிஹிரோ மற்றும் குஷிரோ உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்பட்டதாக ஹொக்கைடோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒபிஹிரோவில், செவ்வாய்க்கிழமை முன்னதாக 129 சென்டிமீட்டர் (4 அடி) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
புதன்கிழமை மாலை வரை அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு ஜப்பானில் 100 சென்டிமீட்டர் (3.2 அடி) பனிப்பொழிவும், ஹொக்கைடோவில் 50 சென்டிமீட்டர் (1.6 அடி) கூடுதலாக பனிப்பொழிவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)