பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு : பதிலடியாக அமெரிக்காவின் நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்த சீனா!
சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பதிலாக சீனாவும் பரந்தளவிலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன்படி நிலக்கரி, எரிவாயு மற்றும் மின்சார லாரிகள் போன்ற சில அமெரிக்க தயாரிப்புகள் மீது பெய்ஜிங் வரிகளை விதித்துள்ளது.
இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தக பதட்டங்களை அதிகரித்தது.
கால்வின் க்ளீன் மற்றும் டாமி ஹில்ஃபிகர் உள்ளிட்ட பிராண்டுகளின் ஹோல்டிங் நிறுவனமான PVH கார்ப் மற்றும் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான இல்லுமினாவை அதன் “நம்பகமற்ற நிறுவனம்” பட்டியலில் சேர்த்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் அபராதம் மற்றும் பரந்த அளவிலான பிற தடைகளுக்கு உட்பட்டிருக்கலாம், இதில் வர்த்தகம் முடக்கம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பணி அனுமதிகளை ரத்து செய்தல் ஆகியவையும் அடங்கும்.