தாய்லாந்தில் சிறு குற்றத்திற்காக கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி!
ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, விடுமுறையில் இருந்தபோது ஒரு சிறிய குற்றத்தைச் செய்தமைக்காக தாய்லாந்து பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
55 வயதான ஆண்ட்ரூ ஹாப்கின்ஸ் என்ற நபர் பாங்காக்கின் தெற்கே உள்ள பட்டாயாவில் உள்ள ஒரு Airbnb இல் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது சாலையில் நடந்துச் சென்ற நிலையில் ஒரு பலகையொன்றில் மோதி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காவலர்கள் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஆண்ட்ரூ அடிபணிவதற்கான சைகையைச் செய்தார், மன்னிப்பு கேட்டார் மற்றும் சேதத்திற்கு பணம் செலுத்த முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அவருடையை சைகையை அதிகாரிகள் புரிந்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)