தீவிரமடையும் AI போட்டி – புதிய AI மாதிரியை அறிமுகம் செய்த அலிபாபா
செயற்கை நுண்ணறிவு உலகின் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில் அலிபாபா நிறுவனம் தனது AI மாதிரி Qwen 2.5- Max என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
DeepSeek AI, Open AI இன் GPT-4o மற்றும் Meta நிறுவனத்தின் Lama AI என்பனவற்றுக்கு போட்டியாக இந்த AI மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அலிபாபாவின் கிளவுட் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்” Open AI, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாதிரிகளுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
DeepSeek நிறுவனம் தொடங்கி 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், குறைந்த விலை, அதிக செயல்திறன் கொண்ட ஏஐ மாடல்களை அறிமுகம் செய்ததால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
அதேநேரம், அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டீப்சீக் நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல் ஓப்பன்ஏஐ, மெட்டா நிறுவனங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அலிபாபா தனது புதிய ஏஐ மாடல் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
சீன ஏஐ நிறுவனங்களின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இத்துறையில் ஏற்கெனவே கோலோச்சியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்கள் தங்களது வியூங்களை மறு ஆய்வு செய்யும் நிலைக்கும் தள்ளியுள்ளது.