இலங்கையில் முட்டை, கோழி இறைச்சியின் விலையில் திடீர் மாற்றம்
இலங்கை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கோழி இறைச்சி 650 முதல் 850 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவினால் விலை குறைவடைந்துள்ளதாகவும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)