தைவானில் நிலநடுக்கம் – விழுந்து சிதறிய பொருட்கள் – பதறியடித்து ஓடிய மக்கள்
தைவானிலுள்ள தைத்துங் (Taitung) நகரில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 8.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்நிலநடுக்கத்தால் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கீழே விழுந்து சிதறின.
பொருள் வாங்கிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் ஆபத்து இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.





