ஜெர்மனியில் அச்சுறுத்தும் காய்ச்சல் அலை – மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
ஜெர்மனியில் காய்ச்சல் அலை தீவிரமடைந்து வருவதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குளிரான காலநிலை காரணமாக மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவதால், வடக்கு ஐரோப்பாவில் காய்ச்சல் வேகமாக பரவுகிறது.
பொது சுகாதார நிபுணர்களின் தகவலுக்கமைய, இந்த ஆண்டு காய்ச்சல் ஏற்கனவே சமூகங்களை பெரிதும் பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் காய்ச்சல் தொற்றுநோயாக மாறுவதற்காக அறிகுறிகள் இருப்பதாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் வாரத்தில் சுமார் 1,220 உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.