HMPV வைரஸ் தொற்று – இந்தியாவில் மேலும் ஒரு சிறுமி பாதிப்பு
சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் தொற்றால் இந்தியாவில் மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புதுச்சேரி சிறுமியொருவர் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
தமிழ்நாடு – புதுச்சேரியில் ஜிப்மர் வைத்தியசாலையில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கும் HMPV வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அச்சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)