இந்தியா : உத்தரபிரதேசத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு!
உத்தரபிரதேச மாநிலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்து கிடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.
மூன்று குழந்தைகளின் உடல்கள் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் லிசாடி கேட் காவல் நிலையப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீடு பூட்டியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மொயின், அவரது மனைவி அஸ்மா மற்றும் அவர்களது மூன்று மகள்களான அப்சா (8), அசிசா (4), மற்றும் அடிபா (1) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடு பூட்டப்பட்ட விதம், குற்றத்தில் ஈடுபட்ட நபர் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவராக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது,” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகள், குற்றத்திற்குப் பின்னால் பழைய பகை இருக்கலாம் என்று கூறுகின்றன. “விரிவான விசாரணை நடந்து வருகிறது அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.