செய்தி தமிழ்நாடு

பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள்

அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள்.

அதிக அளவில் பெண்கள் திரண்டதால் கூடுதலாக பால் குடங்களை உடனடியாக ஏற்பாடு செய்த அதிமுகவினர்.

அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் பால் குட ஊர்லம் நடைபெற்றது. குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏக்கள் பழனி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பெண்களுடன் சேர்ந்து பால் குடங்களை சுமந்து சென்று குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு நடந்து சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பால்குட ஊர்வலத்தில் கலந்து கொள்ள 568 பெண்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆர்வத்துடன் பெண்கள் அதிகளவில் வந்ததால் வந்த பெண்களை திருப்பி அனுப்ப கூடாது என உடனடியாக கூடுதலாக பால் குடங்களை ஏற்பாடு செய்து எடுத்து வரப்பட்டு பக்தர்கள் பால் குடங்களை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி