பிரான்ஸில் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட உணவுப் பெட்டிக்குள் மீட்கப்பட்ட 45 ஐபோன்கள்
பிரான்ஸில் சிறைச்சாலை ஒன்றுக்கு வந்த உணவுப்பெட்டி ஒன்றில் 45 ஐபோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Prison de Fresnes சிறைச்சாலையில் இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வெண்ணை பெட்டிக்குள் இந்த தொலைபேசிகள் மறைத்து எடுத்துவரப்பட்டுள்ளன. தொலைபேசிகளுடன் கஞ்சா போதைப்பொருளும் இருந்துள்ளன.
அத்துடன் சில சிம் அட்டைகளும், இலத்திரனியல் சிகரெட்களும் அதில் இருந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





