ஆஸ்திரேலியா மண்ணில் 29 பந்துகளுக்கு டெஸ்ட் போட்டியில் 50 ரன்கள் அடித்த முதல் வீரர்
இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கம் முதலே இந்தியா அணி அடித்து ஆட வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கிது.
முதல் ஓவரிலே 14 ரன்கள் அடித்தார் ஜெய்ஸ்வால்…. தொடர்ந்து விக்கெட் இழந்தாலும்… அதிக வேகமாக ரன்களை குவிக்க விளையாடி வருகிறார் ரிஷப் ஃபணட்.
விரால் கோலி அவுட் ஆக அடுத்து வந்த ஃபண்ட் முதல் பாலே சிக்ஸ்க்கு பறக்க விட்டான். அதே போல் 6 அடித்து 50 ரன்களை பூர்த்தி செய்தார்.
இவ்வளவு அதிரடியாக விளையாடுவது இந்திய அணிக்கு நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை ஆனால் பார்ப்பதற்கு நல்லா இருக்கிறது.
33 பந்துகளுக்கு 61 ரன்கள் அடித்து அவுட் ஆனார் ரிஷப் ஃபண்ட். முதல் இன்னிங்சில் 98 பந்துகளுக்கு 40 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 33 பந்துகளுக்கு 61 ரன்கள்.
இந்தியாவை பொருத்த வரை 2022 பெங்களூரில் இலங்கை அணிக்கு எதிராக 28 பந்தில் 50 ரன்கள் அடித்தார்…இது தான் இந்தியர் ஒருவரின் சாதனை…
1982 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அணிக்கு எதிராக 30 பந்துகளில் கபில் தேவ் 50 ரன்கள் அடித்தார்.