செய்தி பொழுதுபோக்கு

விடாமுயற்சி’க்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’  

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், ’விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸ் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, பல திரைப்படங்கள் தங்களது ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளன.

அவற்றில் ஒன்றுதான் ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த படம் ஜனவரி 14ஆம் திகதி ரிலீசாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியிடப்பட்ட நிலையில், அந்த பாடல் தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!